"தமிழில் பெயர் பலகை இல்லையென்றால்... அபராதம் மட்டும் போதாது" - விதிகள் கடுமையாகிறதா...?

x
  • தமிழில் பெயர் பலகை குறித்த விவகாரத்தில், கடந்த 2018 முதல் 2022 வரை 4 லட்சத்து 58 ஆயிரத்து ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களில் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது அரசுத் தரப்பில் அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது எனவும் அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
  • கடந்த 2018-2022 வரை 6,074 கடைகளில் நான்கு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • . இதையடுத்து நீதிபதிகள், அபராதம் போதுமானதல்ல தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது என கூறி னர்.
  • எனவே, அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர உத்தரவிட்டு. விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்