பின்னாலே நின்று உதவுவது போல் நைசாக பேசி கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் கார்ட் Change - வைரலாகும் சிசிடிவி காட்சி

• மதுரை வாடிப்பட்டியில், ATM கார்டில் பணம் எடுத்து தருவதாகக் கூறி, இளைஞர் மோசடியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. • வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயா என்ற பெண், தனது மாமியார் வங்கி கணக்கில் பணம் எடுக்க ATM வந்தபோது, அங்கே இருந்த இளைஞர் ஒருவர் பணம் எடுத்து தருவதாகக் கூறி உதவி செய்வது போல் பாசாங்கு செய்துள்ளார். • அப்போது, அந்தப் பெண் கண்ணிமைக்கும் நேரத்தில், பழைய ATM கார்டை மாற்றி கொடுத்துவிட்டு பணம் இல்லை எனக் கூறி அனுப்பியுள்ளார். • பின்னர் அந்த ஏடிஎம் கார்டை வைத்து, பணம் எடுத்ததுடன், நகைக்கடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளார். • இந்தப் புகாரின் அடிப்படையில், மோசடி நபரை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com