மெட்ரோவில் திடீர் விசிட் அடித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி... மரங்களை நட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்

x

கடந்த 2011ம் ஆண்டு இந்த பூங்காவில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க இருப்பதாக கூறி மெட்ரோ நிர்வாகம் கையில் எடுத்தது. மெட்ரோ பணிகள் நிறைவடைந்தும் பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, 300க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார். இதே நேரத்தில் சென்னை வடபழனியில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில் அங்கு விரிவாக்கம் செய்வதற்காக இடங்களை கையில் எடுக்க மெட்ரோ முயன்ற போது அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி, இன்று காலை செனாய் நகர் பூங்காவில் மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்

அப்போது பூங்காவில் மேலும் அதிகமான மரங்களை நடக்கோரி மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மற்றும் மழைநீர் சேகரிக்கும் இடங்களை பூங்காவை சுற்றிலும் அமைக்குமாறும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யுமாறு மெட்ரோ நிர்வாகத்திற்கு செனாய் நகர் பூங்கா பாதுகாப்பு சங்க செயலாளர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்