பணத்தை திருடியதாக 2 சிறுவர்கள் மீது புகார் - லாரியில் கால்களை கட்டி இழுத்து செல்லப்பட்ட சிறுவர்கள்

x

பணத்தை திருடியதாக 2 சிறுவர்கள் மீது புகார் - லாரியில் கால்களை கட்டி இழுத்து செல்லப்பட்ட சிறுவர்கள்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காய்கறி சந்தையில், லாரியில் வைத்திருந்த பணத்தை இரண்டு சிறுவர்கள் திருடியதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் சிறுவர்களை தாக்கி, இருவரின் கால்களையும் லாரியின் பின்புறம் கட்டியவாறு, காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர்களை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதேசமயம் சிறுவர்களை கொடுமையாக தாக்கிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுவர்கள் லாரியில் கட்டி இழுத்து செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்