காட்டில் புலிக்கு மிக அருகில் சென்று போட்டோ எடுத்த நடிகை - இணையத்தில் பரவும் வீடியோ | Raveena Tandon

மத்திய பிரதேசம் மாநிலத்தில், புலிக்கு அருகில் சென்று பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில், புலிக்கு அருகில் சென்று பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் புகைப்படம் எடுத்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த துணை வன அலுவலர் தீரஜ் சிங் சௌஹான் உத்தரவிட்டுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com