முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாதவன்

முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாதவன்
x

நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், தனது குடும்பத்தினருடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை, மாதவன் நேரில் சந்தித்தார்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில், 48 ஆவது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், ஆடவருக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் நடிகர் மாதவன் தனது மகன் வேதாந்த் மற்றும் மனைவி சரிதா ஆகியோருடன், ஒடிசா முதல் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாதவன், விளையாட்டை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்