"மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிறப்பு வார்டுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

x

தீபாவளியை முன்னிட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்