சீறிப்பாய்ந்த சொகுசு கார்... கண்ணிமைக்கும் நேரத்தில் பிளாட்பாரத்தின் மீது... - சென்னையில் பயங்கரம்

x

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அதிவேகமாக சென்ற சொகுசு கார், கல்லூரி சாலையில் இருந்து ஸ்டெர்லிங் சாலையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர நடைப்பாதையின் மீது தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தி கார் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், காரை ஓட்டி வந்தவர் உட்பட 4 இளைஞர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலைய போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்