லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு - தீவிரமாக தேடப்பட்ட பயங்கரவாதி கைது

x

லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த ஹர்பிரீத் சிங்கை தேசிய பலனாய்வு முகமை கைது செய்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

6 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான விசாரணையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சீக்கிய இளைஞர் பெருமன்றத்தின் தலைவர் லக்பீர் சிங் ரோடின் உத்தரவுபடி, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதும், ஹர்பிரீத் சிங் என்பவர் பாகிஸ்தானில் இருந்து வெடிப்பொருட்களை பெற்று வெடிக்க செய்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பயங்கரவாதியான ஹர்பிரீத் சிங் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது.

அதனுடன், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த சூழலில், கோலாலம்பூரில் இருந்து டெல்லி திரும்பிய ஹர்பிரீத் சிங்கை, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்