குறைந்த விலைக்கு நகை பள்ளி ஆசிரியையின் பலே மோசடி

x

பெரம்பலூர் மாவட்டம் அருணகிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி.

45 வயதான இவர், சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனியார் பள்ளி ஆசிரியை ஆசிரியை ஷியாமளா தனக்கு அறிமுகமானதாகவும், பிரபல நகைக்கடையில் இருந்து நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்த நிலையில் அதை தராமல் அவர்கள் இழுத்தடித்து வருவதாக கூறிய கந்தசாமி, இந்த சம்பவத்தில் ஷியாமளாவின் தாய், சித்தி, தங்கை மற்றும் தங்கை கணவர் என 4 பேரையும் குறிப்பிட்டு இருந்தார்.

இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த 5 பேரும் கிட்டத்தட்ட 10 பேரிடம் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதன்பேரில் ஜீவா, அவரின் கணவர் சிவக்குமார் என 2 பேரை கைது செய்த போலீசார், ஷியாமளா உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்