வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி!... மீண்டும் தமிழகம் நோக்கி வரும் ஆபத்து..

x

அந்தமான் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், மேற்கு - வடமேற்கு திசையில், தமிழகம் - புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றார்.

இதன் காரணமாக, நாளை தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், தமிழக கடலோரங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச்கூடும் என்றும் மீனவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்