தாயின் டிராமா.. தந்தையின் ஸ்கெட்ச்.. பாதி வழியிலே உஷாரான மகள்.. பெரும் விபரீதத்தை தடுத்த Whatsapp

x
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது மனைவியை கடத்தியதாக கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் அப்பா, அம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
  • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரன், நாகராணி என்பவரை சமீபத்தில் காதல் திருமணம் செய்துள்ளார்.
  • இந்த நிலையில் நாகராணியின் தாயார் முருகேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தனது தாயை பார்ப்பதற்கு நாகராணி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார்.
  • தொடர்ந்து முருகேஸ்வரி உடல்நிலை மோசமானதால் மதுரை கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூறி நாகராணியின் தந்தை அவரை காரில் வேறு இடத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
  • இதனையடுத்து நாகராணி தனது கணவர் ராஜேஸ்வரனுக்கு whatsapp மூலம் தகவலை தெரிவிக்கவே அவர், தனது மனைவி கடத்தப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்
  • புகாரின் அடிப்படையில் நாகராணியின் அப்பா சேது, அம்மா முருகேஸ்வரி, சித்தப்பா உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்