'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக் - ஸ்ரீதேவியின் இளைய மகள் கதாநாயகியா?

நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி சினிமாவில் நடிக்க தயாராகியுள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க குஷி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அமீர் கானின் மூத்த மகன் ஜுனைத் கதாநாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com