வீடு புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி இளைஞர் கொலைவெறி தாக்குதல்

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 24 வயதான முத்துராஜ் என்ற இளைஞர், இளம்பெண் ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற முத்துராஜ், இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் இளம்பெண் படுகாயம் அடைய, அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்ததுடன், இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்