மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்..பெரும் கோடீஸ்வரரா இந்த புது மாப்பிள்ளை!..வெளிச்சத்துக்கு வந்த உண்மை

x

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த ஒரு காதல் ஜோடி, தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், மணமகன் மகேந்திரன் பெரும் கோடீஸ்வரர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தந்தை இறந்த சோகத்தில் மன அழுத்தத்திற்கு ஆளான தீபாவும், சொத்து பிரச்சனை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான மகேந்திரனும் இன்று இல்வாழ்க்கையில் இணைய காரணமாகியுள்ளது, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்.

இருவரும் இங்கே சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், புதுமாப்பிள்ளை மகேந்திரன் பல கோடிகளுக்கு சொந்தக்காரர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இப்படி பார்க்க போனால், மகேந்திரனுக்கு பரம்பரை சொத்தாக சென்னை அமைந்தகரையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் வீடு இருப்பதும், முகப்பேர் பகுதியில் உள்ள நிலத்தை பங்கு வைத்தால் அவர் கைக்கு சுமார் 175 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வந்து சேர இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் குடும்ப சொத்து காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து குணமடைந்து, தற்போது தான் தனது காதல் மனைவியுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ள அவர், குடும்ப சொத்தை மீட்டு தருவது தொடர்பாக தமிழக அரசின் உதவியை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்துள்ளதால் அரசு தற்போதைக்கு தங்களுக்கு வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மகேந்திரன் முன்வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்