60 ரூபாய் செலுத்தினால் 25 ஆயிரம் பரிசு... கோயம்பேட்டில் களைகட்டு லாட்டரி விற்பனை...

x

சென்னையின் முக்கிய பகுதியில் ஒன்றாக உள்ளது கோயம்பேடு மார்கெட்.

பல ஆயிரம் தொழிலாளிகளின் வீட்டில் அடுப்பு எரிய காரணமாக இருக்கும் ஒரு தொழில் கூடம்.இந்த இடத்தில் வெளியுலகிற்கே தெரியாமல் நீண்ட நாட்களாக லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த அன்றும் மர்கெட்டினுள் உள்ள ஒரு சந்து கடையில் ஓஹோவென ஓடிய லாட்டரி விற்பனையை அமைதியாக மொபைல் கேமராவில் படம்பிடிக்க தொடங்கினோம் .தக்காளி மூட்டை தூக்கி வியர்வை சிந்தி சம்பாதித்த தொழிலாளிகளின் பணத்தை, தக்காளி கூடையில் வாங்கி போட்டு, நம்பர்களை எழுதி முன்பதிவு செய்து கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

சிலர் மூன்று நம்பர்களையும் சிலர் 4 நம்பர்களையும் கூறி பணத்தை கொடுத்தனர்.என்ன நடக்கிறதென கேட்ட போது இது தான் மூனாம் நம்பர் சீட்டு,நாலாம் நம்பர் சீட்டு என லாட்டரியின் சூட்சமத்தை விவரித்தார்கள்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இந்த லாட்டரியை, கேரளா லாட்டரி என சொல்லி விற்க தொடங்கி உள்ளனர்.60 ரூபாய் கட்டினால் 5 லட்சம் வரை அதிஸ்டம் கொட்டும் என கூறி கடையை விரித்திருக்கிறார்கள்.3 ஆம் நம்பர் லாட்டரியில் 60 ரூபாய் கட்டினால் 25 ஆயிரமும், 4 ஆம் நம்பர் லாட்டரியில் 120 ரூபாய் கட்டினால் 5 லட்சமும் பரிசாக விழும் என்று ஆசையை தூண்டி இருக்கிறார்கள்.

இதனை நம்பிய கோயம்பேடு கூலித்தொழிலாளிகள் பலரும் மூட்டை தூக்கி சம்பாதித்த பணத்தை 1000, 500 என கட்டி பறக்க விட்டிகொண்டிருந்தனர். அலைமோதிக்கொண்டு நடந்த இந்த லாட்டரியின் விற்பனையை தடுக்க நினைத்த காவல்துறை கோயம்பேடு AC ரமேஷ் பாபு, மற்றும் INSPECTOR ரமேஷ் கண்ணன் தலைமையில் குழு அமைத்து களத்தில் இறங்கினார்கள்சூதாட்ட விற்பனையில் ஈடுபட்ட முருகேசன், சின்னதுறை,பெரிய சாமி, மணிகண்டன்,விஷ்வ, மோகன்சுதன் ஆகிய ஆறுபேரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

வாரம் ஒரு முறை இந்த லாட்டரி சீட்டு விற்பனை நடக்குமாம். வெளியே தெரியாமல் இருக்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கடையாக மாறி விடுவார்களாம்.இதற்கு பல காவலர்களும் உடந்தையாக இருந்ததாக தெரியவந்திருக்கிறது. வாரம் ஒரு முறை இந்த லாட்டரியின் விற்பனையின் முடிவுகள் கேரளாவில் ஆன்லைனில் வெளியாகும் என்று கூறி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 7100 ரூபாய் பணமும் 2 செல்போன்களும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்