கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்த லாரி - திருவாரூரில் பரபரப்பு

x

திருவாரூர் அருகே சரக்கு ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அய்யனார் கோவில் கட்டடம் முற்றிலும் சேதமானது. வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு உப்பு ஏற்றி சென்ற லாரி, கூடூர் என்ற இடத்தில் வந்த போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த அய்யனார் கோவில் கட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அங்கிருந்த சாமி சிலை, கோவில் கட்டடம் முற்றிலும் சேதமானது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்