லாரி முழுக்க நிரப்பிய மரக்கட்டைகள்.. சாலையில் செல்லும் போது திடீரென உருண்டு விழுந்ததால் பரபரப்பு

x

ராணிப்பேட்டை அருகே, புளியமரம் ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் உடைந்ததால், அதில் இருந்த கட்டைகள் சாலையில் விழுந்து உருண்டன.சென்னையிலிருந்து ஆற்காடு நோக்கி புளியமரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லோடு லாரி வந்து கொண்டிருந்தது. ஆற்காடு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக, லோடு லாரியின் பின்பக்கம் உடைந்து, அதில் இருந்த புளிய மரக்கட்டைகள் சாலையில் விழுந்து உருண்டன. அங்கு பாலம் வேலை நடைபெறுவதால், பின்னால் வந்த வாகனங்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சாலையில் விழுந்த கட்டைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்