லாரி ஓட்டுநர் துண்டு துண்டாக வெட்டி கொலை...விவசாய கிணற்றில் மிதந்த உடல் பாகங்கள்...பாதி உடல், தலை மீட்பு - கை, கால்கள் எங்கே?...போலீஸ் தீவிர விசாரணை

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசப்பட்ட லாரி ஓட்டுவரின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கசுவரெட்டிப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பரின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில், தலை வெட்டப்பட்ட நிலையில் பாதி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார்

பாதி உடல் மற்றும் தலையை மீட்டனர். கை, கால் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவ இடத்தில் சேலம் எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.

மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கிணறு இருந்த இடத்தில் இருந்து விவசாய தோட்டத்தில் உள்ள ஒத்தையடி பாதை வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று நின்று கொண்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தாரமங்கலம் அருகே உள்ள சீரங்கனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ரவி என்பது தெரிய வந்தது.

எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும், குற்றவாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்