• தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டியில் செங்கல் ஏற்றி வந்த லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கார் அப்பளம் போல் நெருங்கியது.
• காரை ஓட்டி சென்ற முகேஷ், காரில் சென்ற பேச்சியம்மாள் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
• விபத்தில் உயிரிழந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியை சேர்ந்தவர்கள் ஆவர்.
• முகேஷ் உடல் காரில் சிக்கி கொண்டு எடுக்க முடியவில்லை என்பதால் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காரை உடைத்து முகேஷ் உடலை மீட்டனர்.