பைக்கில் சென்ற தம்பதியினர் மீது லாரி மோதி பயங்கர விபத்து - பரிதாபமாக பலியான கணவர்

தாம்பரம் அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயமும், அவரது மனைவிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 

அப்போது அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com