பிரசாதம் கொடுக்க பாட்டி வீட்டுக்கு சென்றவர்.. பிணமாக திரும்பிய சோகம்..!

x

மாமல்லபுரம் அருகே கோயில் பிரசாதத்தை பாட்டி வீட்டில் கொடுத்து விட்டு வந் த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரை சேர்ந்தவர் விஜய். இவர் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கோயில் பிரசாதத்தை கொடுப்பதற்காக பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மாமல்லபுரம் அருகே பாட்டி வீட்டிற்கு சென்று திரும்பிய விஜய், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்