கமல்ஹாசன் 'Fan boy' இடத்தை விட்டுக்கொடுத்த லோகேஷ்--யாருக்கு தெரியுமா ?

x

கமல்ஹாசனின் பெஸ்ட் பேன் பாய் யார்? என்பது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், கவுதம் மேனன் ஆகியோரின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது...

வேட்டையாடு விளையாடு படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், கமலின் தீவிர ரசிகர்களில் கவுதம் மேனன்தான் முதலிடம் பிடிப்பார் என தோன்றுவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்த லோகேஷ் கனகராஜ், சந்தேகமே வேண்டாம், கவுதம் வாசுதேவ் மேனன்தான் முதலிடம் என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கவுதம் மேனன், விக்ரம் படம் வருவதற்கு முன் வரை தான் முதலிடத்தில் இருந்ததாகவும், தற்போது லோகேஷ்தான் முதலிடம் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், லோகேஷ் கனகராஜை தாண்ட முயற்சி செய்வதாகவும், இது ஒரு ஆரோக்கியமான சண்டையாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், இந்த சண்டையில் சட்டை கிழியாது, அன்புதான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்