பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்..."குடி தண்ணீருக்காக தவிக்கிறோம்" - கோரிக்கை விடுக்கும் மக்கள்

x

பரமக்குடி அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூட்டியே கிடப்பதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்குள்ள சேமனூர் கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 8 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் திறந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும், மூடியே கிடப்பதாகவும், இதனால் அடிப்படை வசதியான குடிநீரின்றி தவிப்பதாகவும் ஊர்மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நேரகாலமின்றி இரண்டு, மூன்று தினங்கள் காவிரி நீர் விநியோகம் செய்தாலும், சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை இருப்பதாக கூறுகின்றனர். இதனால் வயதானவர்கள் குடிநீர் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் சேமனூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்