ஆன்லைன் மூலம் பாலியல் தொழில்.. பெண்களை குறி வைக்கும் லோகாண்டோ APP.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

x
  • சென்னையில் சட்டவிரோத பாலியல் தொழிலை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • ஆனாலும் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் தரகர்கள் ஈடுபடுத்துவது தொடர்ந்து வருகிறது.
  • சென்னை வடபழனி கனகப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதை கண்டுபிடித்த போலீசார் அங்கிருந்த
  • 7 பெண்களை அண்மையில் மீட்டனர்.
  • பின்னர் அப்பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
  • பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் நடித்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த கணைதாஸ் என்ற அந்த இருவர் மீது ஏற்கனவே பல பாலியல் வழக்குகள் உள்ளன.
  • இதனிடையே லோகாண்டோ என்ற இணையதளம் மூலம் விளம்பரம் செய்து வெஸ்லி என்ற தரகர், கோவாவில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் சென்னையில் பாலியல் தொழில் செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
  • சென்னையில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றை சொகுசு விடுதியாக மாற்றி வெஸ்லி, பாலியல் தொழிலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் ஆன்லைன் பாலியல் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
  • இணையதளத்தில் பெண்கள் அழைப்பது போல் விளம்பரம் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வைத்து, குறிப்பிட்ட இடத்தில் உல்லாசமாக இருக்க வரவழைத்து ஆண்களை ஏமாற்றும் நூதன வகை மோசடியும் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • பாலியல் தொழில் தரகர்கள் அடுத்தடுத்து சிக்குவதால் லோகாண்டோ ஆப் மற்றும் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்து உள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்