இலக்கிய திருவிழாவில் தமிழ் மொழி, காளைகள் உருவம் பதித்த நாணயங்கள் - வியந்து பார்த்து சென்ற மக்கள்

x

தமிழர்களின் தொன்மை, வர்த்தகம் பற்றியும் அதன் உலோக ஆதாரங்களான நாணயங்கள் குறித்தும் சென்னை இலக்கிய திருவிழாவில், நாணயங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா நூற்றரங்கில், சென்னை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.

ராஜராஜ சோழன் பயன்படுத்திய தங்க நாணயம், பித்தளை நாணயம், கங்கைகொண்ட சோழன் நாணயம், விஜயநகர பேரரசு நாணயம், காளைகள் உருவம் பதித்த நாணயம், தமிழ் மொழி பதித்த பழமையான நாணயங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வர்த்தகத் தொடர்பு இருந்தது என்பது உறுதிப்படுத்தும் வகையில், சீன நாணயம், கம்போடியா நாணயமும் இடம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்