பிரிட்டனின் பணக்கார ஆசியர்கள் பட்டியல்...எத்தனாவது இடத்தில் ரிஷி சுனக் குடும்பம் | Rishi sunak

x

பிரிட்டனின் பணக்கார ஆசியர்கள் பட்டியல்...எத்தனாவது இடத்தில் ரிஷி சுனக் குடும்பம் - சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!

பிரிட்டனில் வசிக்கும் பெரும் பணக்கார ஆசியர்கள் பட்டியலில் ஹிந்துஜா குடும்பம் 3.01 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் தொடர்கிறது. இந்த பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்று, 17ஆம் இடத்தை பெற்றுள்ள ரிஷி சுனக் குடும்பத்தின் சொத்து மதிப்பு 7 ஆயிரத்து 798 கோடி ரூபாயாக உள்ளது. ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷ்தா மூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாரயணமூர்த்தியின் மகள் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 965 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள லக்‌ஷ்மி நிவாஸ் மிட்டல் குடும்பத்தின் சொத்து மதிப்பு 1.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 86 ஆயிரத்து 873 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பிரகாஷ் லோயா குடும்பம் மூன்றம் இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்