இழுத்து மூடப்பட்ட மதுபான பார்.. போலீசாருடன் வாக்குவாதம் - சென்னையில் பரபரப்பு | Koyambedu

x

சென்னை கோயம்பேட்டில், போலீசாரால் இழுத்து மூடப்பட்ட மதுபான பார், சட்டவிரோதமாக இயங்கியதால் மீண்டும் மூடப்பட்டது. துரை என்பவருக்கு சொந்தமான கட்டடத்தை, வாடகைக்கு எடுத்து மதுபான Bar நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் வாடகைத் தொகை தராமல் இருந்ததால், அதில் தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கட்டட உரிமையாளர் துரைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, அந்த மதுபான பாரை போலீசார் மூடியுள்ளனர். மீண்டும் மதுபான பார் திறந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் அதனை மூடினர். அப்போது, பார் நடத்திய நபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்