லிங்கேஸ்வரர் கோவில் தாக்குதல் சம்பவம்.."காரணத்தை நம்ப முடியவில்லை" - சீறும் பாஜக

x

அவினாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், கோயிலைத் தாக்கியதாகக் கூறப்படும் மனநிலை சரியில்லாத இளைஞர் போலீசிடம் பிடிபட்டார். கோயில் தாக்கப்பட்டது குறித்து வேதனை தெரிவித்த வானதி சீனிவாசன், இக்கோயிலில் பல முறை தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், தற்போதைய தாக்குதலுக்கு மனநிலை சரியில்லாதவர்தான் காரணம் என்பதை யாரும் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அவினாசி ஆலயத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தேவைப்பட்டால் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் பழமையான கோயில்களைப் பாதுகாக்க தனி பாதுகாப்பு படை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த வானதி சீனிவாசன், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்