மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம், நந்தி சிலைகளை தோண்டி எடுத்த மக்கள்

மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம், நந்தி சிலைகளை தோண்டி எடுத்த மக்கள்
x

சத்தியமங்கலம் அருகே மண்ணில் புதைந்திருந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சத்தியமங்கலத்தை அங்கண கவுண்டன்புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிவலிங்கம் சிலை, புலிக்குத்தி நடுகற்கள், நந்தி சிலைகள் மண்ணில் புதைந்த நிலையில் கிடப்பதாக, கோவையைச் சேர்ந்த அரண்பணி அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு வந்த அறக்கட்டளை குழுவினர், கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கத்தையும், இரண்டு புலிக்குத்தி நடு கற்களையும் தோண்டி எடுத்து, மரத்தடியில் பீடம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர்.

பழங்காலத்தில் கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக இந்த நடுகற்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அறக்கட்டளை குழுவினர் கூறுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்