'லிட்டில் ஜான்' படத்தில் வருவது போல் எல்லாவற்றையுமே குட்டியாக மாற்றும் ஐடி டூட்..பொழுதுபோக்கே FULL டைமாக மாறிய கதை

x

சிவகாசியில் ஐடி துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மினியேச்சர் கலையில் அசத்தி வருகிறார்... இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...

அசல் பேருந்து, ஜீப், கார் எல்லாம் வாங்குவது பலருக்கும் எட்டாக்கனி... ஆனால் ஆசையை நிராசையாக விடாமல் நம்மை திருப்தி படுத்துபவை தான் மினியேச்சர் பொம்மைகள்...

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை தான் பார்ப்பேன் என பலரும் சுற்றிவர, படிப்பு எதுவாயிருந்தால் என்ன, என் திறமையை வைத்து நானே சொந்த வேலையை உருவாக்குவேன் என ஆற்றலோடு செயல்படும் இளைஞர்கள் வெகு சிலரே...

அந்த ஒரு சிலரில் ஒருவர் தான் சிவகாசியைச் சேர்ந்த திலீப் குமார்...

பிசிஏ பட்டதாரியான திலீப்பிற்கு ஒரு தனித்திறமை உண்டு... அதாவது எந்தப் பொருளை பார்த்தாலும், "லிட்டில் ஜான்" படத்தில் வருவதைப் போல் தன் திறமை எனும் மந்திரத்தால் அதை அப்படியே குட்டியாக மாற்றிக் காட்டுவார்...

படித்து முடித்ததும் வெளிநாட்டில் வேலை கிடைத்தது... ஆனால் அந்த சமயத்தில் தான் கொரோனா தன் வேலையைக் காட்ட, வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை...

அடுத்து என்ன செய்வது என யோசித்த திலீப், சற்றும் சந்தேகமின்றி தான் பொழுதுபோக்காக செய்து கொண்டிருந்த மினியேச்சர் கலையை முழு நேர வேலையாக செய்யத் துவங்கினார்...

படித்து முடித்த இளைஞர் வீட்டில் பொம்மை செய்து கொண்டிருந்தால் பொதுவாக பெற்றோரிடம் "தண்டச்சோறு" என்ற பெயர் தானே கிடைக்கும்...

ஆனால் சற்றே வித்தியாசமாக திலீப்பின் பெற்றோர் பண உதவியும் அளித்து, மகனை மகிழ்ச்சியுடன் உற்சாகப்படுத்தியுள்ளனர்...

யூ'லிட்டில் ஜான்' படத்தில் வருவது போல் எல்லாவற்றையுமே குட்டியாக மாற்றும் ஐடி டூட்..பொழுதுபோக்கே FULL டைமாக மாறிய கதை

டியூப் மூலம் முழுமையாக மினியேச்சர் கலையைக் கற்றுக் கொண்ட திலீப், பேருந்து, லாரி, போலீஸ் ஜீப் ஆகியவற்றை அப்படியே தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்