'உடன்பிறப்புகளாய் இணைவோம்' - திமுக-வின் முக்கிய அறிவிப்பு!

x
  • உடன்பிறப்புகளாய் இணைவோம்' மூலம் தி.மு.க.வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கருணாநிதி நூற்றாண்டு, தி.மு.க. பவள விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
  • ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை உடன்பிறப்புகளால் இணைவோம் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும், துரைமுருகன் அறிவித்துள்ளார்.
  • உறுப்பினர் விண்ணப்ப படிவங்களையும், அதற்குரிய கட்டண தொகையையும் பொதுச்செயலாளர், தி.மு.க. தலைமை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • கட்டணத் தொகை பெற்ற பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட படிவங்களில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கப்படும் என்றும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்