ஆழத்திற்கு சென்று... ஆழ்ந்து தூங்கலாம்..! இடம் எங்கு இருக்கு தெரியுமா..! ஒரு நாள் நைட் தங்க இவ்வளவு தான்..!

x


'உலகின் ஆழமான ஹோட்டல்' இணைய வாசிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து வரும் நிலையில், அது பற்றிய சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

அண்ணாந்து பார்க்க வைக்கும் பனிகளால் மூடப்பட்ட மலைகளின் அழகை ரசித்து கொண்டே மலை ஏறுவது மட்டுமின்றி... மலைக்கு அடியே... அமைதி சூழ்ந்த இடத்தில்... ஆழந்த உறக்கம் கொண்டால் எப்படி இருக்கும்?

எதை தொட்டாலும் புதுமை நிறைந்திருக்கும் இன்றைய உலகில்.... இப்படி ஒரு ஹோட்டலா! என நம்மை ஆச்சரியப்படுத்துகிறது, பிரிட்டனில் உள்ள "டீப் ஸ்லீப்" ஹோட்டல்.

"டீப் ஸ்லீப்" என்ற பெயரின் மூலமே இந்த ஹோட்டலின் ஸ்பெஷாலிட்டியை நாம் அறிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்தில் உள்ள விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில் 400 மீட்டர் நிலத்தடியில் அமைந்துள்ளது, இந்த ஹோட்டல். இதனால்தான் இதனை உலகின் மிக ஆழமான ஹோட்டல் என்று கூறுகிறார்கள்.

விக்டோரியன் சுரங்கத்தின் வழியாக மலையேற தொடங்கி.... இயற்கை காட்சிகளை ரசித்தவாறு.. சுரங்கத்தின் கீழே நுழைந்தால் குகை போல் காட்சியளிக்கும் இடத்தில் அற்புதமான தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் இந்த உணவகத்தில் தங்கிவிட முடியாது... வாரத்தில் ஒரு நாள் அதாவது சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மட்டும்தான்... இந்த ஹோட்டலில் தங்க அனுமதி உண்டு.

உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்... அங்குள்ள அறைகளில் தங்க... தங்களுக்கு ஏற்றார் போல் பேக்கேஜ்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்

சுமார் 36 ஆயிரம் முதல் 56 ஆயிரம் ரூபாய் வரை இதற்கான பேக்கேஜ்கள் உள்ளன.

நிம்மதியான தூக்கத்தை வேண்டி தவிப்பவர்கள்... நிச்சயம் இந்த ஆழமான ஹோட்டலுக்கு சென்றால் ஆழ்ந்த தூக்கத்தை போட்டு விடலாம்.

அதுமட்டுமின்றி இந்த அனுபவம் முற்றிலும் வினோதமானதாகவும் சுவாரசியம் நிறைந்ததாகவும் இருப்பதால்... நிச்சயம் இனி வரும் நாட்களில்... இந்த ஹோட்டல் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்