"என் சாவே கடைசியா இருக்கட்டும்.. Pls தமிழக அரசே தடை பண்ணு" - இளைஞரின் வீடியோவால் அதிர்ச்சி

x

நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மியில் ஒரு கோடி ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராணி.

இவரின் மகன் விஜய், தன் தந்தையின் பைனான்ஸ் நிறுவனத்தை கவனித்து வரும் நிலையில், இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை இழந்து விட்டதாகவும் இதனால் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக விஜய் வீடியோ வெளியிட்டார்.

இதனை பார்த்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்