திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், ஊதியூர் மலை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

x
  • ஊதியூர் மேற்கு பகுதியில் கடந்த 3-ந் தேதி செம்மறி ஆடு ஒன்றையும், நேற்று முன்தினம் ஆனைக்கல் தோட்டம் பகுதியில் கன்றுகுட்டி ஒன்றையும் சிறுத்தை அடித்து கொன்றது.
  • இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.
  • இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை அறிய, 7 இடங்களில் கண்காணிப்புக் கருவியை பொறுத்தியுள்ளனர்.
  • மேலும், கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
  • இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை மாலை 4 மணிக்கு மேல், மலையில் உள்ள கோவில்களுக்கு யாரும் செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு வனத்துறையின்ர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • மேலும், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்