படப்பிடிப்பில் காயமடைந்த 'லியோ' வில்லன் சஞ்சய் தத் - ரசிகர்கள் கவலை

x

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் KGF 2 படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். லியோவில் தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு , அந்த இடைவேளையில் கன்னட படம் KD-யில் நடித்து வந்த சஞ்சய் தத், வெடிகுண்டு வெடிக்கும் காட்சியின் போது நடந்த விபத்தில் காயமடைந்துள்ளார். முகம், கை, முழங்கை பகுதிகளில் காயம் பட்டதால் படப்பிடிப்பு உடனடியாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும், தற்போது சஞ்சய் தத் குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்களும் GET WELL SOON என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்