'லியோ' 19ஆம் தேதி- ரசிகர்களின் மாஸ்டர் பிளான் - வெளியானது ரகசிய தகவல்

x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் லியோ படம், அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு, ஓடியன் என்று சொல்லக்கூடிய பிரமாண்டமான பேனர்களை திரையரங்குகளில் வைக்கும் பணியை ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜய் பார்க் திரையரங்கில் பேனர் வைத்து, லியோ திருவிழா ஆரம்பம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பாக, திரையரங்கு வெளியே பேனர்கள், கட் அவுட்கள் வைப்பது வழக்கம். ஆனால், லியோ திரைப்படம் ஆயுத பூஜை அன்று வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் தற்போதே கொண்ட தொங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்