கசிந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் காட்சிகள்... படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

x

'கேப்டன் மில்லர்' படத்தின் காட்சிகள் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் உள்ள வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் போர் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்