ஆட்குறைப்பு செய்யும் முன்னணி நிறுவனங்கள் - அதிர்ச்சியின் உச்சத்தில் ஊழியர்கள்

அமேசான், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து பெப்சிகோ நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

பெப்சி, கோலா, லேஸ், டிராபிகானா ஜூஸ் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும் நிறுவனமான பெப்சிகோ அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. சென்ற ஆண்டு இதே டிசம்பரில் சுமார் மூன்று லட்சம் பேர் அந்நிறுவனத்தில் வேலை புரிந்து வந்தனர். உலகெங்கிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டாலும் அமெரிக்காவிலேயே 40 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். போதிய லாபம் ஈட்ட முடியாததால் செலவை குறைக்கும் நோக்கில் அந்நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com