தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே - உடனே ராஜினாமா கடிதம் கொடுத்த காங்., நிர்வாகிகள்

x

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களிடம் நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா கடித‌த்தை கொடுத்துள்ளனர். அகில இந்திய காங்கிரசின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று காலை பொறுப்பேற்றார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள், பொதுச்செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தங்களது ராஜினாமா கடித‌த்தை தலைவரிடம் கொடுத்துள்ளதாக, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகளை மல்லிகார்ஜுன கார்கே நியமிக்க ஏதுவாக, அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்