சாலையை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் -வழி கேட்ட வாகன ஓட்டிக்கு வலிக்க வலிக்க அடி, உதை...

x

பிஜாபூர் மாவட்டத்தின் ஜல் நகர் பகுதியில் வழக்கறிஞர்கள் போலீசாருக்கு எதிராக சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது... அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டி வழக்கறிஞர்களிடம் கொஞ்சம் வழிவிடுமாறு கேட்டுள்ளார்... இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர்கள் அந்த வாகன ஓட்டியை கண்மூடித் தனமாக விரட்டி விரட்டி தாக்கத் துவங்கினர்... அங்கிருந்த காவலர்கள் சிலர் அடி வாங்கிய நபரை வழக்கறிஞர்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர்... இதுவரை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்