பிஎஃப்ஐ அமைப்புக்கு கராத்தே பயிற்சி அளித்த வழக்கறிஞர் - என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்த முடிவு

x

கேரளாவில் பிஎஃப் ஐ அமைப்புக்கு கராத்தே பயிற்சி அளித்த வழக்கறிஞரை என்ஐஏ அதிகாரிகள், ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கொச்சி எடவனக்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முகமது முபாரக் என்பவர் வீட்டிலிருந்து கோடாரி, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரை கடந்த 30 தேதி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதனை ஏற்று கொண்ட நீதிமன்றம் அவரை ஐந்து நாள் என் ஐ ஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்