கணவன் மனைவியை கத்தியால் தாக்கிய வழக்கறிஞர் - வெளியான பரபரப்பு காட்சிகள்

x

திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் கத்தியை காட்டி சூப் கடை உரிமையாளரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. திருப்பாச்சூரில் சூப் கடை நடத்தி வருபவர் மரியா. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான ஐசக் என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மரியா காவல்நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஐசக், மரியாவையும் அவரது கணவரையும் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பானது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், ஐசக் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்