வழக்கறிஞர் படுகொலை வழக்கு... போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளி - துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்

x

கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி ஜெயப்பிரகாஷ், தட்டப்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் ஜெயப்பிரகாஷை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர் ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். தொடர்ந்து ஜெயப்பிரகாஷை போலீசார் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இதனால், காலில் காயமடைந்த முக்கியக் குற்றவாளி ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தாக்குதலில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்த தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன், குற்றவாளி தாக்குதல் நடத்தியதால் வேறு வழியில்லாமல் போலீசார் சுட்டுப்பிடித்ததாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்