"லத்தி" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி... வாழ்த்து தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

x

வீரமே வாகை சூடும் படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் லத்தி படத்தை, அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து "ராணா புரொடக்‌ஷன்" என்ற பெயரில் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் காவல்துறை முன்னாள் அதிகாரி ஜாங்கிட், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்