"லேட்... ஆனா கரெக்ட் டைம்ல வந்திருக்கேன்" மாஸ் என்ட்ரி கொடுத்த விக்ரம்

x

நடிகர் விக்ரம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரை பெரும்பாலான நடிகர், நடிகைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை நடிகர் விக்ரம் ட்விட்டர் பக்கத்தில் இணையாமல் இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமான பக்கத்தை தொடங்கி, ட்விட்டரில் இணைந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், லேட்டா வந்திருக்கேன் என்றாலும், சரியான நேரத்தில் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்