அம்மாடி இவ்ளோ பெருசா...?கடல்லே இல்லயாம் மீனவரிடம் சிக்கிய உலகின் மிகப் பெரிய தங்கமீன்

x

உலகின் மிகப்பெரிய தங்க மீனைப் பிடித்து பிரிட்டன் மீனவர் ஒருவர் பெயர் பெற்றுள்ளார்.

அழகுக்காகவும் நம்பிக்கைக்காகவும் தங்க மீன்களை தொட்டியில் வளர்ப்பதைப் பார்க்கலாம். உலக அளவில் பல நாடுகளிலும் ஏரி போன்ற நீர் நிலைகளில் பெரிய பெரிய தங்க மீன்களை வளர்த்து வருகிறார்கள். இந்த தங்க மீன்களில் உலகிலேயே பெரியது, கடந்த 2019ல் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பிடிக்கப் பட்டது என்று கருதப்பட்டு வந்தது. ஜேசன் ஃபுகட் என்பவர் பிடித்த அந்த தங்க மீனின் எடை, 13.6 கிலோவாக இருந்தது.

இப்போது, அதைவிடப் பெரிய தங்க மீனைப் பிடித்திருக் கிறார்கள், பிரான்ஸ் நாட்டில் . அங்குள்ள கேம்பேன் பிரதேசத் தில் உள்ள புளூவாட்டர்ஸ் லேக் எனும் ஏரியில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி ஹேங்கட் எனும் மீனவர் 30.5 கிலோ எடை கொண்ட தங்க மீனைப் பிடித்திருக்கிறார்.

இந்த மீன், லீதர், கோய் என்கிற இரண்டு வகை மீன்களின் கலப்பினமாகும். தங்க மீனைப் பிடித்தபடி போஸ் கொடுத்துவிட்டு, மீண்டும் அதை பாதுகாப்பாக ஏரிக்குள் விட்டுவிட்டார், ஹேண்டி!


Next Story

மேலும் செய்திகள்