பருவமழையால் நிலச்சரிவு..பேருந்து வந்த சமயத்தில் திடீரென உருண்டு வந்த பாறை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மூணார் தேவிகுளம் கேப் சாலையில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்தால், ராட்சத பாறை கற்கள் சாலையில் உருண்டு விழுந்துள்ளன. அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் கடந்து சென்ற அடுத்த சில நொடிகளில் மிக பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். நிலச்சரிவால், கேப் ரோடு பகுதி வழியாக கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com