என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கும் விவகாரம் - ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.78 லட்சம் வழங்க முடிவு

x

கடலூர் மாவட்டம் வடலூரில் என்எல்சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சி சார்பில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் துறை மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு உடைய உரிமையாளர்களுக்கு சுமார் 78 லட்சம் ரூபாய் வரை சரியீட்டு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான பணப்பலன் உள்ளிட்டவை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி ஆகிய கிராமங்களில் 548 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 280 நபர்களுக்கு 15 கோடியே 68 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்