வீட்டில் 'கை' வைத்தியம் பார்த்து கணவனை கொன்ற மனைவி - சென்னையில் பயங்கரம்.. அதிர்ச்சி பின்னணி

x

சென்னையில் மதுகுடித்து தகராறு செய்த கணவனை, மனைவியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த வேல்முருகன், வினோதினி தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் உடல் அசைவின்றி கிடந்த வேல்முருகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

https://youtu.be/3_KZ1HY4Xc0போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 9-ஆம் தேதி மது அருந்திவிட்டு தகராறு செய்த வேல்முருகனை, அவரது வயிற்றில் மனைவி வினோதினி கத்தியால் குத்தியதும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே கை வைத்தியம் பார்த்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தப்பியோடிய மனைவி வினோதினியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்